விஸ்வாசம் திகில் படமா?- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
நடிகர் அஜித்குமாரின் அடுத்தத் திரைப்படம் எந்த வகையான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு விளக்கமளித்துள்ளது.
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் இணைந்து அதே கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்'. இதற்கு முன்னர் இந்தக் கூட்டணியால் வெளியிடப்பட்ட 'விவேகம்' பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதால் 'விஸ்வாசம்' மீது கறை படிந்துவிடாமலிருக்க இந்தக் கூட்டணியர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படம் ஒரு திகில் படம் என்ற கருத்து பரவலாகப் பரவியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஸ்வாசம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தரப்பிலிருந்து விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, விஸ்வாசம் ஒரு திகில் படமில்லை என்றும் குடுமத்துடன் அனைவரும் கண்டு மகிழும் ஒரு கமர்ஷியல் படம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நிறைவு பெறுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருகின்றன.