சென்னை ராயபுரத்தில் கொரோனா பரவல் குறையவில்லை..

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில், சென்னையில்தான் அதிகபட்சமாக 11,131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5735 பேர் குணமடைந்துள்ளனர். 84 பேர் பலியாகியுள்ளனர். மண்டல வாரியாக கொரோனா பாதிப்பைக் கவனித்தால், ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் தொடர்ந்து அதிகமான நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

திருவெற்றியூர் மண்டலத்தில் 322 பேர், மணலி-152, மாதவரம்-237, தண்டையார்பேட்டை-1096, ராயபுரம்-2065, திரு.வி.க.நகர்-1253, அம்பத்தூர்-472, அண்ணா நகர்-924, தேனாம்பேட்டை-1188, கோடம்பாக்கம்-1488, வளசரவாக்கம்-740, ஆலந்தூர்-132, அடையாறு-619, பெருங்குடி-185, சோழிங்கநல்லூர்-184 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. வெளிமாநிலங்களிலிருந்து வருவோரில் சிலருக்குத்தான் கொரோனா பாதித்துள்ளது. ஆனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சமூகப் பரவலாகி விட்டதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு கொரோனா பரவியிருக்கிறது.

More News >>