அமெரிக்காவில் கொரோனா பலி ஒரு லட்சம் தாண்டியது..

அமெரிக்காவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இது வரை 56 லட்சத்து 84,802 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில், 24 லட்சத்து 30,594 பேர் குணமடைந்துள்ளனர். 3 லட்சத்து 52,225 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக, அமெரிக்காவில் இது வரை 17 லட்சத்து 25,275 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 4 லட்சத்து 79,969 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 572 பேர் பலியாகியுள்ளனர்.நியூயார்க் மாகாணத்தில் 3 லட்சத்து 73,622 பேர் பாதித்த நிலையில், 29,491 பேர் பலியாகியுள்ளனர். நியூஜெர்சியில் ஒரு லட்சத்து 57015 பேர் பாதித்த நிலையில், 29,491 பேர் பலியாகியுள்ளனர். மாசோசூசெட்ஸ் மாகாணத்தில் 93,693 பேர் பாதித்த நிலையில், 6473 பேர் பலியாகியுள்ளனர். பென்சில்வேனியாவில் 72,876 பேர் பாதித்த நிலையில், 5194 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>