எச்சை ராஜா அறிவை இழந்துவிட்டார் - குஷ்பு செம காட்டம்
பெரியாரின் நிழலைக்கூட தொட முடியாது என்றும் எச்சை ராஜா அறிவை இழந்துவிட்டார் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகமெங்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை ‘எச்ச ராஜா’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவருடைய பதிவில், ”சில எச்சை ராஜாக்கள் தங்களது நன்னெறிகளை இழந்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு பதிவில், ”அழுக்கு எச்ச ராசாவை வெளியேற்றுவதற்கு பா.ஜ.க.வுக்கு தைரியம் இருக்கிறதா என்று பார்ப்போம். நான் சவால் விடுக்கிறேன். பெரியார் சிலையை உடைக்கும் நாளை தெரிவியுங்கள்... நான் அங்கே இருக்கிறேன். தைரியம் இருந்தால் நீங்கள் என்னையோ அல்லது என்னை போன்றவர்களையோ தொட்டுப்பாருங்கள். உங்கள் நிழல்கூட பெரியாரை சிலையை நெருங்க முடியாது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.