கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல்.. புதிய கட்டுப்பாடுகள்..

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் முதன் முதலாகக் கேரளா மாநிலத்திற்குள்தான் இந்நோய் பரவியது. கடந்த ஜன.30ம் தேதி உகான் நகரிலிருந்து வந்த மருத்துவ மாணவிக்குத்தான் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, உடனடியாக தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. கேரளாவுக்குப் பின் கொரோனா பரவிய மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில்தான் அதிகமானோருக்குப் பரவி வருகிறது. அதே சமயம், கேரளாவில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்படும். இன்று(மே27) ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 1004 பேருக்கு கொரோனா பரவிய நிலையில் 559 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 445 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கொரேனாவுக்கு இது வரை 5 பேர் பலியாகியுள்ளனர். அதே சமயம், வெளிநாடுகளில் வசிக்கும் மலையாளிகளில் 179 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்றார்.

More News >>