கொரோனா கானா - டான்ஸ் மாஸ்டர் ஸ்பெஷல்.. காவல் துறையினருக்கு அர்ப்பணம்..

கொரோனா விழிப்புணர்வு கீதத்தின் வெற்றிக்குப் பிறகு BESTIE ONLINE GROCERIES ராஜேஷ் மோகன், JOD Events, மற்றும் ஸ்டேஜ் ஷோ இந்தியா ஒன்றிணைந்து மீண்டும் காவல் துறையினர்க்காக ஒரு அர்ப்பணிப்பு பாடல், சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான கானா பாடல் பாணியில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான இணைப்பையும், காவல்துறையினரின் தன்னலமற்ற வேலைக்கான பிணைப்பையும் பிரதிபலிக்கும் பாடலாகக் கானா ராஜாவேல் எழுதி பாடி உள்ளார். டேவிட் இசை அமைத்துள்ளார். அனைத்து வயதினரும் பார்த்து ரசித்து மகிழும் வகையில் இது அமைந்துள்ளது. அம்பத்தூர் துணை ஆணையர் ஐ.ஈஸ்வரன் அலுவலகத்தில் இது வெளியிடப்பட்டது.சென்னை அம்பத்தூர் காவல் துறையினருக்காக நடன இயக்குனர்கள் ராம்ஜி,ராபர்ட், ராஜு முருகன் மற்றும் விஷ்வா ஆகியோர் இணைந்து கொரோனா கானா - டான்ஸ் மாஸ்டர் ஸ்பெஷலாக இதனை உருவாக்கி உள்ளனர்.

More News >>