ராஷ்மிகா மகிழ்ச்சிக்கு வித்திட்ட லாக்டவுன்..

டியர்காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய தெலுங்கு படங்களில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தன்னா. இவர் அடுத்து கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷூட்டிங். ஷூட்டிங் என்று பறந்துகொண்டிருந்த ராஷ்மிகாவுக்கு கொரோனா தடைக்காலம் ஓய்வும் மகிழ்ச்சியும் அளித்திருக்கிறது.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: வெளிப்படையாகச் சொல்வதானால், நான் என் வாழ்க்கையில் இவ்வளவு நீண்ட காலம் வீட்டில் தங்கவில்லை. பள்ளி முதல் உயர் கல்வி வரை நான் எப்போதும் ஹாஸ்டலில் இருந்தேன். என் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்று நான் அடிக்கடி நினைத்தேன், ஆனால் அது டீனேஜில் என்னை எச்சரிக்கையாக வைத்திருக்கவே என்பது தெரிந்தது. படப்பிடிப்புகளின் போது இரவு நேரங்களில் என் அம்மா என்னுடன் தங்கியிருந்த நாட்கள் எனக்கு நினைவிருக்கிறது. என் அப்பா குடும்பத்துடன் சில தரமான நேரத்தைச் செலவழிக்க தன்னுடைய பணிகளை விரைவாக முடித்துக்கொண்டு வருவார்.

இந்த லாக்டவுனில் நான் 2 மாதங்களுக்கும் மேலாக வீட்டில் செலவிட்டேன், இது மிக நீண்டது. நாங்கள் எங்கள் வேலையைப் பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் பாசத்தைப் பகிர்ந்துகொண்டோம். அவர்கள் கவலைப்படுவதெல்லாம் என்னை பற்றித்தான். அவர்கள் தரும் தைரியம்தான் எல்லாவற்றையும் சமாளிக்க எனக்கு பலத்தைத் தருகின்றன. எனக்கு மகிழ்ச்சி தரும் இடம் வீடு. மகிழ்ச்சியான மற்றும் அமைதியான இந்த நாட்களை நான் வீட்டிலேயே கழிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இடைவிடாத நீண்ட வேலைக்குப் பிறகு குடும்பம்,வீடு என்று திரும்பி வந்து நிம்மதியாக உணர்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

More News >>