பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்கும் வழி..
பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்கும் எளிய வழிகளை இப்போது பார்க்கலாம்..
சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள்.
இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
தொப்பையை குறைக்க நினைக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை:
ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.
கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.