நடிகை பூனம் கவுர் யாரை தாக்குகிறார்.. உன்னை விட விலைமாதுவே மேல்..

நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி, 6 போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். புதிய பட வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர் திரையுலகினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பரபரப்பான மெசேஜ்கள் வெளியிட்டு வருகிறார்.

பூனம் கவுர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள மெசேஜில், பணத்துக்காகப் பெற்றவர்களை கைவிட்டு தனது கேரக்டரையும் இழந்து நிற்கும் பெண்ணைவிட விலைமாதுவே மேல் எனக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். இவர் யாரைத் தாக்குகிறார் என்று பலரும் கேட்ட நிலையில் கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டியை அவர் தாக்கியிருப்பதாகத் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன் ஸ்ரீரெட்டி, நடிகை பூனம் கவுர் பற்றி வெளியிட்ட மெசேஜில், பூனம் அக்கா முகமூடி எதற்கு அணிந்திருக்கிறீர்கள். நமக்கெல்லாம் மாஸ்க் தேவையா? மாஸ்க்குக்கு கீழே என்ன இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடியாகத்தான் பூனம் கவுர் இப்படிப் பொங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

More News >>