பாட்டு, நடன திறமையைத் தேடும் நடிகைகள்...

கொரோனா லாக்டவுனில் பலரும் பல விதத்தில் ஏழை, எளியவர்களுக்கு உதவி வருகின்றனர். நடிகை ஆண்ட்ரியா, வரலட்சுமி திறமைகளைத் தேடி நிதி திரட்டி அதன் மூலமாக உதவுகின்றனர். இதுகுறித்து ஆண்ட்ரியா கூறும்போது,திறமை இருந்தும் இன்னும் பாத்ரூம் பாடகர்களாகவே இருப்பவர்கள் தங்கள் திறமையை எங்கள் மூலமாக வெளிப்படுத்துங்கள்.

சிறந்த குரல் வளம் கொண்டவரை நான் தேர்வு செய்வேன். நடனத்தில் சிறந்தவர்களை நடன இயக்குனர் ஜெஃப்ரி, வரலட்சுமி தேர்வு செய்வார்கள். சிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள்.ஜெஃப்ரியின் வாயிலாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள். இதன்மூலம் கிடைக்கும் நிதியை லாக்டவுனில் பாதித்தவர்களுக்கும், உதவி தேவையானவர்களுக்கும் உதவப்படும் என்றார்.

More News >>