இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.82 லட்சமாக அதிகரிப்பு

நாட்டில் இது வரை ஒரு லட்சத்து 82,143 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் சராசரியாக 7 ஆயிரம், 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றி வருகிறது. நேற்று ஒரே நாளில் 8380 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

தற்போது, நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 82,143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 86,984 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று உயிரிழந்த 193 பேரையும் சேர்த்து இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 5164 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி, கேரளாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பரவியிருக்கிறது.

More News >>