சூர்யாவுடன், காக்க காக்க 2ம் பாகத்தில் நடிக்க ஜோதிகா தயார்.. கவுதம் மேனன் ஸ்கிரிப்ட் ரெடி செய்வாரா?..

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இணைந்து நடித்த படம் காக்க காக்க. கவுதம் மேனன் இயக்கியிருந்தார். அன்புச்செல்வன் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். 2003ம் ஆண்டு வெளியான இப்படம் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

சமீபத்தில் ஜோதிகா ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார். அவரிடம் ஒரு ரசிகர். காக்க காக்க 2ம் பாகத்தில் நடிப்பீர்களா? என்று கேட்டார். அதற்குப் பதில் அளித்த ஜோதிகா. சூர்யாவுடன் இணைந்து காக்க காக்க2ம் பாகத்தில் நடிக்க நான் தயார். ஆனால் அதற்கு இயக்குனர் கவுதம் மேனன் ஸ்கிரிப்ட் ரெடி செய்ய வேண்டும் என்றார்.ஜோதிகாவின் இந்த பதிலை அடுத்து கவுதம்மேனனிடம், காக்க காக்க 2ம் பாகம் ஸ்கிரிப்ட் ரெடி செய்யச் சொல்லி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கடந்த 2 வருடத்துக்கு முன்பு சூர்யாவிடம் ஸ்கிரிப்ட் சொல்லச் சென்றார் கவுதம் மேனன். அவரது இயக்கத்தில் நடிப்பதாக கூறிய சூர்யா ஸ்கிரிப்ட்டை முழுமையாகச் சொல்லாததால் விலகினார். இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. பின்னர் இந்த ஸ்கிரிப்ட்டில் விக்ரம் நடித்தார். அப்படம் துருவ நட்சத்திரம் பெயரில் உருவாகி இருக்கிறது, இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

More News >>