ருசியோ ருசி.. பேபிஃகார்ன் பிரியாணி ரெசிபி
ருசியோ ருசி.. பேபிஃகார்ன் பிரியாணி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
சமைக்க தேவையானவை
நெய்-50 மில்லி ஏலக்காய் - 2 பட்டை - 1 பிரிஞ்சி இலை-1M கிராம்பு - 2 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள்(தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 50 கிராம் கரம்மசாலா - அரை டீஸ்பூன் புதினா இலை - 50 கிராம் உப்பு - தேவையான அளவு திக்கான தேங்காய்ப் பால் - 2 கப் எண்ணெய் -50 மில்லி மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு பொடியாக நறுக்கிய தக்காளி - 150 கிராம் ஃப்ரெஷ் பேபிஃகார்ன் - 15 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -200 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 6 பாஸ்மதி அரிசி -அரை கிலோ
உணவு செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊறவைக்கவேண்டும் .பின் அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும்
.பிறகு இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்பு இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பேபிஃகார்ன் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் , கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஊற வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவேண்டும் .
பின்னர் இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவிடவும். நெய் மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி மூடி போடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.