கமல் பட வில்லன் வெப் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. போலீஸ் கமிஷனரிடம் புகார்..

வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. இவர் பல்வேறு படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். வெப் சீரிஸில் காட்மேன் என்ற தொடரில் நடிக்கிறார். சோனியா அகர்வால். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாபு யோகேஷ்வரன் இயக்கும் இத்தொடர் தனியார் இணைய தளத்தில் வரும் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் டிரைய்லர் வெளியானது, அதில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்பு எழுந்தது. காட்மேன் இணையதள தொடருக்குத் தடை விதிக்க வேண்டும், அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசுவ இந்து பரி‌‌ஷத் (தமிழ்நாடு) சென்னை போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

More News >>