தெலங்கானா தோன்றிய நாள்.. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..

தெலங்கானாவின் 6வது தினத்தையொட்டி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு சுதந்திரமடைந்த பிறகு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. கடந்த 1953ம் ஆண்டு முதல் தொடர்ந்து தெலங்கானா மாநிலம் கோரி போராடி வந்தனர். கடைசியாக, கடந்த 2014ம் ஆண்டில் புதிதாக தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

இதன்பின்னர், ஆண்டுதோறும் ஜூன் 2ம் தேதியன்று தெலங்கானா நாள் கொண்டாடப்படுகிறது. இதன்படி, இன்று தெலங்கானா மாநிலத்தில் மாநிலம் உதயமான நாள் கொண்டாடப்படுகிறது. எனினும், கொரோனா பரவல் காரணமாக விழாக்கள் நடத்தப்படவில்லை.தெலங்கானா நாளையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துக்கள். கடினமான உழைப்பு மற்றும் சிறந்த செயல்பாட்டினால் தெலங்கானா மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். அனைவருக்கும் பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

More News >>