அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை: உச்ச நீதிமன்றம்nbsp

புதுடெல்லி: நீட் உள்பட அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் அறிமுகம் செய்யப்படும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, வங்கி கணக்கு, செல்போன் எண் உள்ளிட்டவை உடனும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆதார் எண் இணைக்க மார்ச் 31ம் தேதி வரை கெடு முடியவுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.

இதன் முடிவில், ஆதார் எண் இணைக்க கெடுக்காலத்தை நீட்டிக்க விருப்பம் உள்ளதா ? இல்லையா ? என்பது குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், நீட் உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

More News >>