விஜய் நடிகை சந்தித்த அவமானம்.. நிற பாகுபாடு குறித்து நறுக்..

தளபதி விஜய்யுடன்.. மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். நடிகையாக மட்டுமல்லாமல் பைக் ரேசர். காட்டு விலங்குகள் புகைப்படம் எடுப்பவர் என்று தனது திறமைகளை வளர்த்திருக்கிறார். அடிக்கடி சமூக கருத்துக்களும் பகிர்வார் அமெரிக்காவில் சமீபத்தில் கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இது போன்ற நிற பாகுபாடு அவமானத்தைச் சிறுவயதில் சந்தித்தாக மாளவிகா கூறினார். அந்த சம்பவம் குறித்துக் கூறும்போது, ' 14 வயதிருக்கும். எனது நண்பன், தன் அம்மா அவனை டீ குடிக்க விடமாட்டாராம். டீ குடித்தால் தோல் நிறம் கருப்பாகிடும் என்பாராம். அவன் வீட்டுக்கு நான் ஒருமுறை சென்ற போது என்னை அவனுக்கு சுட்டிக் காட்டி டீ குடித்தால் இவளைப் போல் நீ கருப்பாகிவிடுவாய் என்றார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

More News >>