பிரபல தமிழ் நடிகருக்கு பலமுறை காதல் தோல்வி, பிரேக் அப்.. ரகசிய திருமணம் நடந்ததா?..
நெஞ்சில் ஜில் ஜில், இளவட்டம், ஏகன், அ ஆ இ ஈ,, இது என்ன மாயம், அறிந்தும் அறியாமலும் எனப் பல படங்களில் நடித்திருக்கிறார் நவதீப். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் தோல்வி பிரேக் அப் எனப் பல சோகங்களைச் சந்தித்திருக்கிறார். அவருக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி நவதீப் கூறும்போது, 'எனக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாகப் பல முறை செய்திகள் வந்திருக்கிறது. அதெல்லாமே பொய்யான தகவல். இப்போதும் அதேபோல் பரப்பி விட்டிருக்கிறார்கள். எனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை . நான் ஒரு பிரமச்சாரி. பலரும் பேசுவது போல் ஒருபோதும் எனக்கு ரகசிய திருமணம் ஆகவில்லை. நான் பலமுறை காதலில் விழுந்திருக்கிறேன். பல பெண்களுடன் டேட்டிங் செய்திருக்கிறேன். நிறைய பிரேக் அப் அனுபவங்கள் சந்தித்திருக்கிறேன். அதுபற்றி நான் வெளிப்படையாகப் பேசியிருக்கிறேன். இவ்வாறு நவதீப் கூறினார்.