பிரபல பாடலாசிரியர் மரணம்..

பாலிவுட்டுக்கு என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. ரிஷி கபூர், இர்பான் கான் ஆகிய இரண்டு பிரபல நடிகர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் 42 வயதே ஆன இசை அமைப்பாளர் வாஜித் கான் கொரோனா பாதிப்பால் இறந்தார். அதேபோல் இளம் நடிகர் ஒருவரும் இறந்தார்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் அன்வர் சாகர் நேற்று இறந்தார். அவருக்கு வயது 70. வீட்டில் அவர் மயங்கி விழுந்தார். அன்வரை உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். 80. 90களில் அன்வர் ஏராளமான பாடல்கள் எழுதி உள்ளார். டேவிட் தவானின் யரானா, ஜாக்கி ஷெராப்பின் சப்னே சாஜன் கி மற்றும் அக்‌ஷய்குமார் நடித்த கில்லாடி, மைன் கில்லாடி து அனாரி போன்ற பிரபல பாடல்கள் இவர் எழுதி உள்ளார்.

More News >>