ஆஸி. பிரதமருடன் வீடியோ கான்பரன்சில் மோடி ஆலோசனை..

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் வீடியோ கான்பரன்சில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இருநாடுகளும் வர்த்தக, கலாச்சார தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென மோடி குறிப்பிட்டார்.ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியாவுக்கு வருவதற்காகப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதால், உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் வீடியோ கான்பரன்சில் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அச்சமயம், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக, கலாச்சார தொடர்புகளை மேலும் பெருக்கிக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக மோடி தெரிவித்தார்.இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு நீடிப்பது, இந்திய பசிபிக் பிராந்தியப் பகுதிகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்தார். கொரோனா பாதித்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு உதவி வரும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

More News >>