நயன்தாராவின் ldquoகோகோrdquo படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..

நயன்தாரா நடித்து வரும் "கோலமாவு கோகிலா" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னணி ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வரும் ஹீரோயின்கள் மத்தியில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இந்நிலையில், அறம் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, ஜாக்குலின், அறந்தாங்கி நிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல் ஒன்று நாளை ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

More News >>