ஊரடங்கில் டப்பிங் முடித்தார் பிரியா பவானி.. குருதி ஆட்டம் போஸ்ட் புரொடக்ஷன்..

மாஸ்டர், மாபியா பட ஹீரோயின் பிரியா பவானி சங்கர். இவர் அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம் படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. நடிகை பிரியா பவானி சங்கர் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்தார். இப்படத்தை ஸ்ரீ கணேஷ் டைரக்டு செய்கிறார்.

More News >>