தயாரிப்பாளர் சங்க தலைவர் வேட்பாளர் தேனாண்டாள் முரளிக்கு வாழ்த்து..

100 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தைத் தயாரித்து இருந்தார். தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குப் பலரும் வாழ்த்துக் கூறினர்.

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் தேனாண்டாள் முரளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . விரைவில் தமிழ்த் திரைப்பட தாயாரிப்பளர் சங்க தேர்தல் நடக்க உள்ளது. அதில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>