போலீசாருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்.. காட்மேன் வெப் சீரீஸை நிறுத்த கும்பலுக்கு துணை நிற்பதா?

வேட்டையாடு விளையாடு பட வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ். சோனியா அகர்வால் நடிக்கும் வெப்தொடர் காட்மேன். இது ஒடிடி தளத்தில் வெளிபரப்ப ஏற்பாடானது, இதையொட்டி அதன் டிரெய்லர் வெளியானது. ஜெயம் ரவி நடித்த தாஸ் என்ற படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார்.

இந்த தொடர் இந்து மதத்துக்கும், குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிராக இருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்ததுடன். தொடரைத் தடை செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டது. சர்ச்சை எழுந்ததையடுத்து அந்த தொடர் வெளியீடு நிறுத்தப்பட்டது. இதற்கு இயக்குனர் பா.ரஞ்சித் தனது டிவிட்டரில் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அதில் காட்மேன், தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய் வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வன்மையான கண்டனங்கள். இந்த தொடரைத் தயாரிப்பதில் உறுதுணையாக இருந்து விட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய தயாரிப்பு நிறுவனத் தாரின் செயல் ஏற்புடையது அல்ல, மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பா.ரஞ்சித்.

More News >>