ஸ்ரீதேவி கணவர், மகள்களுக்கு கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் என்ன தெரியுமா?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்ததுடன் தற்போது மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரிக்கிறார். அவர் இன்று டிவிட்டரில் ஒரு மேசேஜ் வெளியிட்டார்அதில் கூறியது:என் மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடந்தது.

அதில் நெகடிவ் அதாவது கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்தது. ஏற்கனவே என்னிடம் பணியாற்றிய 3 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதில் குணம் அடைந்தனர். இதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். 14 நாட்கள் தனிமைப்படுத்தலிலிருந்த நாட்களும் முடிந்து விட்டது. மீண்டும் எங்கள் பணிகளை புதிய வேகத்துடன் தொடங்குகிறோம்.

கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவரும் மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கும், மற்றும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கும் எங்கள் நன்றி. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமே குணம் அடைய அனைவரும் பிராத்திப்போம். வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம். அரசு காட்டும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடப்போம். இவ்வாறு போனிகபூர் கூறி உள்ளார்.

More News >>