17000ம் குடும்பத்துக்கு விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை உதவி..

நோட்டா, டியர் காம்ரேட் படங்களில் நடித்திருப்பவர் விஜய தேவரகொண்டா. இவர் நடத்தும் தி விஜய தேவரகொண்டா பவுண்டேஷன் (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு கொரோனா தடை காலத்தில் உதவி வழங்கப்பட்டது.இதுபற்றி அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கை விவரம்:விஜய் தேவரகொண்டாவின் இந்த அறக்கட்டளை இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது. மேலும் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இந்த கட்டளையில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்குச் சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண நிலையை எதிர்கொள்ள மட்டுமே முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் இயக்கத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது.

இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.அடிப்படையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விஜய் தேவரகொண்டாவுக்கும், அந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நன்கறிந்தவர். இந்த நெருக்கடி காலகட்டத்தில் அவர்களுக்குத் தோல் கொடுக்க மற்றொரு வாய்ப்பாக அமைந்தது. இந்த திட்டத்தை அறிவித்தவுடன் நன்கொடையை வாரி வழங்கி அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொதுமக்கள் காண்பித்தது அவருக்கு உத்வேகத்தை மேலும் அதிகரித்தது. அறக்கட்டளையிடம் உதவி கோரிய ஒவ்வொரு குடும்பத்தினரின் பின்னணி மற்றும் விவரங்களைச் சரி பார்த்து உறுதி செய்த பின்னரே உதவி செய்யப்பட்டது.

இந்த அறக்கட்டளையானது தாங்கள் உதவுவதோடு நிறுத்தி கொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்களையும் உதவ வலியுறுத்தியதுடன் சுமார் 535 தன்னார்வலர்கள் அவர்களுடன் இணைத்து பெரும் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வெற்றிகரமாக உதவத் துணை புரிந்துள்ளது. அறக்கட்டளையின் இந்த தீவிர பெரும்பாலும் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்து வந்த தொழிலாளர் வர்க்க குடும்பங்களுக்கு உதவியதன் மூலம் அளப்பறிய பணியை இந்த அறக்கட்டளை ஆற்றியுள்ளது. நிதிகளை கையாண்டதில் வெளிப்படை தன்மை மற்றும் திட்டமிட்டு செயல்பட்டதன் மூலம் இந்த அறக்கட்டளையும், விஜய் தேவர்கொண்டாவும் அனைவரின் பாராட்டுதல்களை மட்டுமல்லாமல் இதயங்களையும் வென்றுள்ளனர். இது இத்துடன் முடிந்து விடவில்லை, இந்த நற்பணியைத் தொடர விரும்பும் விஜய் தேவர்கொண்டா மேலும் பல நலத்திட்டங்களை வரும் நாட்களில் அறிவிப்பார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News >>