நடிகர் ரஜினிக்கு கொரோனாவா? இந்தி நடிகர் கிளப்பிய வதந்தியால் பரபரப்பு..

காபில், கேலண்டர் கேர்ள்ஸ், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரோஹித் ராய், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கொரோனா லாக்டவுனில் ஜோக் சொல்வதாகக் கூறி வெளியிட்ட ஒரு மெசேஜ் அவரை பிரச்சனைக்குள் சிக்க வைத்திருக்கிறது.

தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது எனக் குறிப்பிட்டிருப்பதுடன் கொரோனாவை வீழ்த்துவோம். பாதுகாப்பாக இருங்கள். மீண்டும் பணிக்குத் திரும்புங்கள். மாஸ்க்கை சுத்தமாக வைத்திருங்கள். வைரஸ் நீங்கள் தீண்டாதவரை வைரஸ் உங்களைத் தீண்டாது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரோஹித்தின் டிவிட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும், ஜோக்கிற்காக நீங்கள் இப்படிச் செய்தது வேண்டாத வேலை. உடனே இந்த மெசேஜை அழியுங்கள் என்று டோஸ் மேல் டோஸ் விட்டு வருகின்றனர்.

More News >>