விமான அதிபராக நடிக்கும் சூர்யாவுக்கு சென்சார் சர்ட்டிபிகேட் .. என்ன சான்று தெரியுமா?..

நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கும் படம் சூரரைப் போற்று. இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். மாதவன், ரித்திக்கா சிங் நடித்த இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கிறது.

ஏப்ரல், மே மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு எல்லாவற்றையும் கவிழ்த்து போட்டுவிட்டது. ரசிகர்களுக்கு ஆறுதலாகப் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்குத் திரையிடப்பட்டது. படத்துக்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகப் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News >>