சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா வைரஸ்.. டிரம்ப் பேச்சு..

கொரோனா வைரஸ் பரவாமல் சீனாவே கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், உலகத்திற்கு இந்த மோசமான பரிசை அந்த நாடு கொடுத்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:சீனாவைக் கட்டமைக்கும் பணியில் அமெரிக்கர்களும் அதிக அளவில் பணியாற்றியிருக்கின்றனர். ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாயைக் கொடுத்துள்ளோம். சீனா முயன்றிருந்தால், கொரோனா வைரஸ் நோய் வெளிநாடுகளுக்குப் பரவாமல் தடுத்திருக்கலாம். ஆனால், உலக நாடுகளுக்கு மோசமான பரிசாக கொரோனாவை சீனா கொடுத்துள்ளது.

அமெரிக்கா உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. நாம் சீனாவுடனும் இணைந்துதான் பணியாற்றுகிறோம். அமெரிக்காவில் கடந்த வாரம் என்ன நடந்தது என்பதைப் பார்த்து விட்டோம். இது இனி நடக்கக் கூடாது. இது சமத்துவத்திற்கான நாள். இங்கு எல்லோரும் சமமானவர்கள்.இவ்வாறு டிரம்ப் பேசினார்.

More News >>