173 தமிழர்களை விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த நடிகர்..

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் மக்கள் திண்டாடி வருகின்றனர். மும்பையில் சிக்கிக் கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை மீட்டுத் தனி விமானத்திலும், பஸ்களிலும் சொந்த ஊருக்குக் கடந்த வாரங்களில் அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட். இவர் ஒஸ்தி படத்தில் சிம்புக்கு வில்லனாகவும். அருந்ததி படத்தில் அனுஷ்காவுக்கு வில்லனாகவும் நடித்தவர்.

மும்பை சயான்கோலி வாடா பகுதியில் சொந்த திரும்ப முடியாமல் இருந்த தமிழர்கள் சோனு சூட் அலுவலகத்தில் சொல்லி உதவி கேட்டனர். இந்த தகவலை அறிந்த சோனு, 173 தமிழர்களை நேற்று விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். அவருக்குக் கற்பூர ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

More News >>