ரசிகர் மீது புகார் கொடுத்த நடிகை நிலாவுக்கு ஹீரோயின் அட்வைஸ்..

அ ஆ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிலா. இவர் பிற மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தவர், எனக்கு ஜூனியர் என்டிஆரை விட மகேஷ்பாபுவைத்தான் பிடிக்கும் என்றார். இதில் கோபம் அடைந்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் நடிகை நிலவுக்கு எதிராக வசை பாடினார்கள். மானபங்கம் செய்வோம், உண்டு இல்லை என்றாக்கி விடுவோம் எனக் கடுமையாக எச்சரித்தனர்.

இதனால் பயத்தில் ஆழ்ந்த நிலா தன்னை மிரட்டிய ரசிகர்கள் மீதும் அவதூறாகப் பேசியவர்கள் மீதும் போலீசில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நிலாவுக்கு நடிகை பூனம் கவுர் அட்வைஸ் செய்திருக்கிறார். நடிகர், நடிகை என்றால் விமர்சனங்களைத் தடுக்க முடியாது. திட்டுவது ரசிகர்கள் செய்யும் வேலை கிடையாது, அவர்கள் அப்பாவிகள். அரசியல் கட்சிகள் போலி பெயர்களில் இதில் தலையிடுகின்றன. சில மீடியாக்களும் யார் மூலமாவது ஏற்பாடு செய்து பரபரப்புக்கு இந்த செயல்களைச் செய்வதுண்டு. இதை நடிகை நிலா புரிந்துகொள்ள வேண்டும் என்னையும் இதுபோல் விமர்சித்திருக்கிறார்கள். அதுபற்றி தெரிந்திருந்ததால் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன் என்றார்.

More News >>