மோதலுக்கு தயாராகும் இரண்டு ஹீரோக்கள்..

கொரோனா லாக்டவுனில் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து திரையுலகமும் மீண்டு வருவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. தமிழ் திரையுலகில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி கொடுத்தாலும் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்கப்படவில்லை. இந்தி, தெலுங்கு திரையுலகில் ஷூட்டிங் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்குவதற்கான திட்டமிடலைத் தொடங்கிவிட்டனர்.

இயக்குனர் ராஜமவுலி தற்போது இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்புக்கான ஷெட்யூல் போட்டு வருகிறார். இப்படத்தில் ராம் சரண். ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். லாக்டவுனுக்கு பிறகு தொடங்கும் இந்த படப்பிடிப்பில் இரண்டு ஹீரோக்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சிகள் முதலில் படமாகிறது.இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் ஜிம் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உடலைக் கட்டுக்கோப்பாக்கி வருகின்றனர்.

More News >>