அஜித்குமாரின் புதிய கெட்-அப்!- விஸ்வாசம் ஸ்டைலா?

சிறுத்தை' சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் இணைந்து அதே கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்'. இதற்கு முன்னர் இந்தக் கூட்டணியால் வெளியிடப்பட்ட 'விவேகம்' பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதால் 'விஸ்வாசம்' மீது கறை படிந்துவிடாமலிருக்க இந்தக் கூட்டணியர் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பின்போது பொதுவெளியில் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக் உடன் பிரென்ச் பியர்டு, பிரேம் போட்ட கண் கண்ணாடி என முற்றிலும் மெருகேறிய தோற்றத்தில் அஜித்குமார் இருந்தார். இந்த லுக் உடன் தான் அஜித் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாரா என அவரது ரசிகர்கள் வலைவீசி காரணம் தேடி வருகின்றனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருகின்றன.

நான்காவது முறையாக ‘சிறுத்தை’ சிவா உடனும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா உடனும் கூட்டணி அமைக்கும் அஜித் முதன்முறையாகத் தன் படத்துக்கு இமான் இசை அமைப்பதை வரவேற்றுள்ளார்.

 

 

More News >>