இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் 70 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும், கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. மாறாக, தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தாலும் கொரோனா கட்டுப்படவில்லை. மாறாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் இந்த சமயத்தில்தான் வேகமாகப் பரவி வருகிறது.தினமும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனைகளில் கடந்த நான்கைந்து நாட்களாகத் தினமும் புதிதாக 9 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா கண்டறியப்படுகிறது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 9983 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிந்தது. நேற்று மட்டுமே 206 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 7135 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் இது வரை 2 லட்சத்து 56,611 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 24,095 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 25,381 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 85,975 பேர், தமிழ்நாட்டில் 31,667 பேர், டெல்லியில் 28,936 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

More News >>