நடிகை திடீர் பெயர் மாற்றம்..

நடிகர்கள், டைரக்டர்கள், நடிகைகள் என சினிமாவுலகமே நியூமராலஜி, ஜோதிடம் என நம்பிக்கை கொண்டவர்கள் தான் அதிகம். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார், நீலிமா ராணி. இவர் பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்திருக்கிறார். நீங்கள் நியூமாரலஜிப்படி பெயரை மாற்றிக் கொண்டால் பெரிய இடத்தை பிடிக்கலாம் என்று சிலர் சொல்ல அவரும் அதை நம்பி தனது பெயரை நீலிமா இசை என மாற்றிக்கொண்டிருக்கிறார். பெயர் மாற்றிய நேரம் அவருக்கு யோகம் அடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

More News >>