கொரோனா ஊரடங்கு.. தமிழகம், கேரள எல்லையில் நடந்த எளிய திருமணம்..

தமிழ்நாடு, கேரள எல்லையில் ஒரு ஜோடிக்குச் சாலையில் திருமணம் நடந்தது.கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, இம்மாதத்துடன் முடிகிறது. எனினும், பல்வேறு கட்டுப்பாடுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டுள்ளன.

அதே சமயம், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர், இ-பாஸ் பெறுவது, பரிசோதனை செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த ஜூனில் கேரளாவில் உள்ள இடுக்கியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. நிச்சயிக்கப்பட்டபடி இடுக்கியில் திருமணம் செய்வது என்றால், இருமாநிலத்தில் உள்ள உறவினர்கள் வந்து செல்வதிலும், கூட்டம் கூடுவதிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் ஒரு முடிவெடுத்தனர்.

அதன்படி, இடுக்கியில் இருமாநில எல்லையில் உள்ள சின்னார் பாலத்தின் அருகே சாலையிலேயே திருமணம் செய்யவும், குறைந்த உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இருமாநில எல்லையில் மணமகளும், மணமகனும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.இது பற்றி, தேவிகுளம் முன்னாள் எம்எல்ஏவான ஏ.கே.மணி கூறுகையில், யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்காமல் இருதரப்பிலும் முக்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு இந்த திருமணம் நன்றாக நடந்து முடிந்துள்ளது என்றார்.

More News >>