ldquoநான் வந்துட்டேன்னு சொல்லு..!rdquo- இன்ஸ்டா அதிரடியில் சூப்பர்ஸ்டார்!

நடிகர் ரஜினிகாந்த் ஒரே நாளில் சமூக வலைதளங்களில் அதிரடி என்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாகவேப் பேசினார்.

தமிழக அரசியல் சூழலில் நிலவி வரும் வெற்றிடத்தை நிரப்பவே அரசியல் களம் காண இருப்பதாகக் கூறிய ரஜினிகாந்த் விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் திடீரென ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என புதிதாக சமூக வலைதளங்கள் பக்கம் சூப்பர்ஸ்டார் என்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த ரஜினி தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களிலும் இணைந்துள்ளார்.

ட்விட்டரில் 4.58 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட ரஜினிக்கு ஒரே நாளில் ஃபேஸ்புக்கில் ஒரு லட்சம் ஃபாலோயர்கள் இணைந்துள்ளனர். இதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 ஆயிரம் ஃபாலோயர்கள் சேர்ந்துள்ளனர்.

தனது இன்ஸ்டாகிராம் முதல் பதிவாக கபாலி திரைப்பட புகைப்படத்தைப் பகிர்ந்த ரஜினி, "வணக்கம்! நாந் வந்துட்டென்னு சொல்லு' என கேப்ஷன் உடன் என்ட்ரி தந்துள்ளார்.

More News >>