தனுஷுக்கு ஜோடியாகிறார் மணிரத்னம் நாயகி..

ராஜ்கிரண், ரேவதி ஜோடியாக நடித்த படம் பா.பாண்டி. இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கியிருந்தார். இப்படத்தின் 2ம் பாகம் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அது பற்றிய பேச்சு அடங்கிப் போனது. வரிசையாக அசுரன், பட்டாசு படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் தனது 2வது படத்தை டைரக்ட் செய்யவிருக்கிறார். அப்படத்துக்கு நான் ருத்ரன் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கிறார்.நான் ருத்ரன் தமிழ் தெலுங்கு இருமொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் நாகார்ஜூனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

More News >>