ஒடிடியில் ஸ்ரீதேவி மகள் படம் ரிலீஸ்.. உண்மைக் கதையில் நடித்த ஜான்வி..

ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் பாலிவுட்டிலும் ஒடிடி தளத்தில் படங்கள் வெளியாகின்றன. கார்கில் போரில் பங்குபெற்ற முதல் விமானப் படை வீராங்கனை குர்ஜான் சக்சேனாவின் வாழ்க்கை கதை அதே பெயரில் உருவாகி உள்ளது.

இதில் குர்ஜான் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். இதற்காக விமானம் ஒட்டும் பயிற்சிகளும் பெற்றார். இப்படத்தை ஷர்ன் சர்மா டைரக்ட் செய்திருக்கிறார்.கொரோனா ஊரடங்கு தடையால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் இப்படத்தை நெட்பிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். இதனைப் படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தெரிவித்திருக்கிறார்.அதற்காக ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

More News >>