காட்மேன் வெப் சீரிஸ் இயக்குனருக்கு முன் ஜாமின்..

டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் போன்றவர்கள் நடித்திருக்கும் காட்மேன் வெப் சீரிஸ் ஜீ 5 என்ற டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருந்தது. இதன் டீசர் வெளியானது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பிட்ட சமூகத்தையும் இந்து மதத்தைப் பற்றி தவறாகச் சித்தரித்து காட்சிகளில் இடம் பெற்றதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் இந்த வெப் சீரிஸை தடைசெய்ய வேண்டும் என்றும் இயக்குனர், தயாரிப்பாளரைக் கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து காட்மேன் தொடர் தயாரிப்பு நிறுவன பிரதிநிதி இளங்கோ, டைரக்டர் பாபு யோகேஸ்வரன் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதியும், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியுமான செந்தில் குமார் விசாரித்தார். இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

More News >>