கொரோனா பாதிப்பில் மேலும் ஒரு நடிகர் மரணம்..

கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதில் இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கின்றனர். திரையுலகினரும் பாதிக்கப்பட்டிருகின்றனர் சில தினங்களுக்கு முன் இந்தி பட இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர். தற்போது மலையாள நடிகர் எஸ்.ஏ. ஹாசன் என்பவர் மரணம் அடைந்திருக்கிறார்.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள சங்கரன் குழியைச் சேர்ந்தவர். ஹாசன் சில காலங்களுக்கு முன் ஹலோ துபாய் காரன் என்ற படத்தில் நடித்தார். இவர் துபாயில் தொழில் அதிபராக இருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்கு வயது 51.

More News >>