இந்தியாவில் கொரோனா சாவு 8102 ஆக அதிகரிப்பு.. 2.86 லட்சம் பேருக்கு பாதிப்பு..

இந்தியாவில் இது வரை 2 லட்சத்து 86,579 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 8102 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சுகாதார அமைச்சக அறிக்கையின்படி, நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 9996 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

நாட்டில் இது வரை 2 லட்சத்து 86,579 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 41,029 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 37,418 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் நேற்று மட்டுமே 357 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 8102 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 325 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அங்கு மொத்தத்தில் 94,044 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 44,517 பேர் குணம் அடைந்துள்ளனர். 1857 பேர் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் தமிழகத்தில் 36,841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 326 பேர் பலியாகியுள்ளனர். இவற்றுக்கு அடுத்து டெல்லி, குஜராத், ம.பி. மாநிலங்களில் கொரோனா அதிகமாகப் பரவியிருக்கிறது.

More News >>