கடன் வாங்கியவர்கள் இனி வெளிநாடு தப்ப முடியாது - பாஸ்போர்ட்டை கைப்பற்ற உத்தரவு

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கிங் ஃபிஷர் நிறுவனர் விஜய் மல்லையாவை தொடர்ந்து நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி போன்றோர் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களைப் பெற்று, வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், மேலும் பலர் இதனைப் பின்பற்றக்கூடும் என்று வங்கிகள் அஞ்சுகின்றன.

இதனையடுத்து, வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கியவர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை 45 நாட்களுக்குள் கைப்பற்றும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாஸ்போர்ட்டுகளைக் கைப்பற்றுவதன் மூலம் கடன் பெற்றவர்களின் முழுமையான விவரங்களை அறிய முடியும் என்பதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

More News >>