மும்பையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 97பேர் பலி..

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. மும்பையில் மட்டுமே நேற்று புதிதாக 1540 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 97 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி வருகிறது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலும், தமிழ்நாட்டிலும்தான் நிறையப் பேருக்குப் பரவுகிறது.

மகாராஷ்டிராவில் நேற்று 3607 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டது. இதையடுத்து, இம்மாநிலத்தில் 97,648 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 3580 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.இந்த மாநிலத்தில் தலைநகர் மும்பையில்தான் கொரோனா அதிகமாகப் பரவியிருக்கிறது. மும்பையில் நேற்று முன் தினம் வரை 52,445 பேருக்கு கொரோனா பரவியிருந்தது. சீனாவில் கொரோனா தோன்றிய உகான் மாநகரிலேயே 50,333 பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், உகானையும் மும்பை முந்தியது.

இந்நிலையில், நேற்று மும்பையில் 1540 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் நேற்று மட்டுமே கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் தற்போது வரை 53,985 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில், 24,209 பேர் குணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>