கொல்கத்தாவில் நோய் எதிர்ப்பு ஸ்வீட் விற்பனை..

கொல்கத்தாவில் கொரோனா நோய் பரவலை அடுத்து, நோய் எதிர்ப்பு ஸ்வீட்களை விற்கத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. தினமும் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில் தான் அதிகபட்சமாக கொரோனா பரவியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் இது வரை 9768 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கொரோனாவால் 442 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.மேலும், கொல்கத்தா ஸ்வீட் கடைகளில் புதிதாக நோய் எதிர்ப்புச் சக்தி இனிப்புகளை(இம்யூனிட்டி பூஸ்டர் ஸ்வீட்) விற்பனை செய்கின்றனர்.

இது பற்றி, ஸ்வீட் ஸ்டால் அதிபர் ஒருவர் கூறுகையில், கொரோனாவுக்கு மருந்து இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் பொருட்களை மக்கள் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். இந்த வகையில், 15 விதமான நோய் எதிர்ப்பு உணவுப் பொருட்களைக் கொண்டு இந்த புதிய வகை இனிப்புகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

More News >>