நடிகை ஹன்சிகாவுக்கு தொழில் அதிபருடன் திருமணம்? நடிப்புக்கு முழுக்கா..

விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்ததுடன் சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்திருப்பவர் ஹன்சிகா. சமீபகாலமாக அதிகப்பட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். ஆனாலும் தனது 50வது படமாக சிம்புவுடன் மஹா படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு மும்பை தொழில் அதிபரை விரைவில் ஹன்சிகா மணக்க உள்ளதாக சில நாட்களாகத் தகவல் பரவி வருகிறது. இது குறித்து தோழி ஒருவர் ஹன்சிகாவுக்கு தொடர்பு கொண்டு. திருமணம் பற்றி எனக்குச் சொல்லாதது ஏன்? என்று கேட்க அதிர்ச்சி அடைந்த ஹன்சிகா, அதுபற்றி எனக்கே தெரியாதே என்று புலம்பினார். தனது இணைய தள பக்கத்தில் திருமணம் பற்றி அளித்த விளக்கத்தில் வெறும் புரளி. அட கடவுளே யார் அவர்? எனக் கேட்டிருக்கிறார் ஹன்சிகா.

More News >>