ஹன்சிகா 5 வருட ரோமியோ கொண்டாட்டம்..

திருமண வதந்தி கடந்த சில தினங்களாகப் பரவியதில் அப்சேட் ஆகியிருந்தார் ஹன்சிகா. திருமணம் எதுவும் செய்யவில்லை, யாரோ கிளப்பி விட்ட வதந்தி என்று விளக்கம் அளித்தார். அந்த விஷயத்தை அதோடு மறந்துவிட்டு 5 வருடம் பின்னோக்கி சென்று ஜெயம் ரவியுடன் நடித்த ரோமியோ ஜூலியட் படம் பற்றிய பழைய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் ஹன்சிகா.

எனக்கு பேவரெட் படம் ரோமியோ ஜூலியட். இதன் படப்பிடிப்பில் நிறைய மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்தன. படப்பிடிப்பில் மிகவும் சவுகரியமாகவும் அருமையான நேரங்களையும் உணர்ந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஹன்சிகா. இந்த பதிவை ஜெயம் ரவி, ரோமியோ ஜூலியட் பட இயக்குனர் லக்‌ஷ்மன் இருவருக்கும் டேக் செய்திருக்கிறார் ஹன்சிகா.

More News >>