ரஜினியின் பேட்ட படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள்.. விஜய் நடிகை போட்ட குண்டு..
மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். மாளவிகா மோகனன். இதற்கு முன் அவர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நெருக்கமானவர்கள் கூறினார்களாம்.
இதுபற்றி மாளவிகா அளித்துள்ள ஒரு பேட்டியில்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பு பற்றி நெருக்கமானவர்களிடம் கூறியபோது சிறிய கதாபாத்திரம் நடிக்க வேண்டாம் என்றார்கள் ஆனால் அந்த பாத்திரம் சிறியதாக இருந்தாலும் எனக்குப் பிடித்திருந்தது. அதுவும் ரஜினி சார் நடிக்கும் பட வாய்ப்பை விட்டால் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமோ , இல்லையோ ? என்ற சந்தேகம் இருந்தது. அதனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன். அந்த வாய்ப்பு என்னை நன்றாகவே அடையாளம் காட்டி இருக்கிறது.இவ்வாறு மாளவிகா மோகனன் கூறினார்