பாடகியாக மாறிய மணிரத்னம் ஹீரோயின்..

இயக்குனர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைத்ரி. ஏற்கனவே இவர் மாடலிங் செய்வது, நடனம் ஆடுவது என வெவ்வேறு திறமையாளாராக இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாகப் பாடும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஜிவி.பிரகாஷ் நடிக்கும் படம் ஜெயில். வசந்தபாலன் இயக்குகிறார். இப்படத்துக்காக காத்தோடு காத்தானேன்.. என்ற பாடலை அதிதி பாடினார். அவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து இப்பாடலைப் பாடி இருக்கிறார். இப்பாடல் நாளை வெளியாக உள்ளது.

More News >>