தங்கைக்கு ஹேர் கட் செய்யும் தலைவி பட நடிகை..

தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த கங்கனா ரனாவத் இந்தியில் நடிக்கச் சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஜான்சிராணி கதையாக உருவான மணி கர்ணிகா படத்தில் இயக்குனர் பொறுப்பு ஏற்றதுடன் அதில் நடித்தார்.மேலும் சில படங்களில் கதை, திரைக்கதையில் பங்கேற்றார். அடுத்து அயோத்தி ராமர் கோவில் பற்றி படம் இயக்க உள்ளார்.

இதற்கிடையில் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை கதையாகத் தமிழில் உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார் கங்கனா. இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார்.கொரோனா லாட்கவுனில் தனது குடும்பத்தினருடன் மணாலியில் பொழுதைக் கழித்து வரும் கங்கனா தனது தங்கை ரங்கோலிக்கு முடி வெட்டி அழகு செய்தார். வீட்டிலிருக்கும் நாட்களை இதுபோல் ஒரு சில வேலைகளைச் செய்து தனது மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்கிறாராம் கங்கனா.

More News >>